மேற்கிந்திய தீவுகளுக்கு இடியை இறக்கிய நியூசிலாந்து! ஒருநாள் தொடரில் வாஷ்அவுட்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 38 (51) ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும், ஜேக்கப் டுஃபி மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதிரடி காட்டிய சாப்மேன்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 30.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மார்க் சாப்மேன் 64 ஓட்டங்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 40 ஓட்டங்களும் விளாசினர். ஃபோர்டே, சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
New Zealand clean sweep the West Indians 3-0 🔥
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 22, 2025
They have now won 9 straight men's ODIs at home! pic.twitter.com/FpdAQLRk64
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |