இந்திய அணியை துரத்தும் துரதிர்ஷ்டம்! கடைசி போட்டியும் ரத்து..கோப்பையை வென்ற நியூசிலாந்து
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
மீண்டும் மழை
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹாக்லே மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 219 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 51 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 104 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
@Twitter/BCCI
மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
@BLACKCAPS
தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
ஆனால் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லாதம் தட்டிச் சென்றார்.
@BLACKCAPS
@BLACKCAPS