தற்காப்புக்காக இளைஞரை கொன்றதாக கூறிய சுவிஸ் பொலிசார்: தெரியவந்துள்ள உண்மை
சுவிஸ் மாகாணமொன்றில், இளைஞர் ஒருவர் கத்தியுடன் தங்களைத் தாக்கவந்ததால், தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக பொலிசார் கூறியிருந்தார்கள்.
ஆனால், அவர்கள் கூறியதில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
தெரியவந்துள்ள உண்மை
2021ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தைச் சேர்ந்த Nzoy Roger Wilhelm என்னும் இளைஞர், Vaud மாகாணத்திலுள்ள Morges ரயில் நிலையத்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் கத்தியுடன் தங்களைத் தாக்கவந்ததால், தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக பொலிசார் கூறியிருந்தார்கள்.
ஆனால், அவர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை, அவர் தப்பியோடத்தான் முயன்றாரேயொழிய, பொலிசார் கூறியதைப்போல், தாக்க முயலவில்லை என எல்லை தடயவியல் மற்றும் ஆய்வு ஏஜன்சி தற்போது தெரிவித்துள்ளது.
வீடியோ ஆதாரங்களை 3D reconstructions முறையில் ஆராய்ந்ததில், Nzoy துப்பாக்கியால் சுடப்படும்போது அவரது கைகள் விரிக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளதாகவும், ஆகவே, அவர் கையில் ஆயுதம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த Nzoyயின் மரணம் தொடர்பான அறிக்கையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
ஆக, Nzoy கத்தியுடன் தங்களைத் தாக்கவந்ததால், தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக பொலிசார் கூறியிருந்த விடயம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |