மோசமாகும் உடல்நிலை: மகளை பதவியில் அமர்த்த கிம் ஜாங் உன் திட்டம்
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உனின் உடல் நிலை மோசமாகிவருவதால், தனது மகளை அடுத்து பதவியில் அமர்த்துவதற்கான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக தென்கொரிய உளவாளிகள் தெரிவித்துள்ளார்கள்.
எப்போதும் மகளுடன் காணப்படும் வடகொரிய ஜனாதிபதி
கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் பொது இடங்களில் தன் மகளுடனேயே தோன்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
மோசமாகும் உடல் நிலை
மீண்டும் உடல் அதிக அளவில் பெருத்து காணப்படும் கிம்முக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் இருக்கின்றன.
அவரது உடல் எடை 140 கிலோவாக அதிகரித்துள்ளது.
தனது உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதால், தனக்குப் பின் தனது பதவியில் அமர தனது மகளை அவர் பயிற்றுவித்து வருவதாக நம்பப்படுகிறது.
விடயம் என்னவென்றால், கிம் மகளுடைய வயது 11 மட்டுமே!
கிம் ஜாங் உன்னுக்கு மதுப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளன.
2011ஆம் ஆண்டு, அவரது தந்தையான Kim Jong-il மாரடைப்பால் மரணமடைந்ததால்தான் கிம் பதவிக்கே வந்தார்.
அதேபோல, கிம்முடைய தாத்தாவான Kim Il-sungக்கும் 1994ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆக, தன் குடும்பத்தினருக்கு இப்படி உடல் நல பிரச்சினைகள் இருந்ததால், தனக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என கருதும் கிம், தனது மகளை எதிர்கால வடகொரிய ஜனாதிபதியாக்குவதற்காக, அவரை இப்போதே பயிற்றுவிப்பதாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |