Freezerல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுவனின் உடல்! போலீசார் கண்ட அதிரவைத்த காட்சி
அமெரிக்க நகரம் ஒன்றில், ஒரு வீட்டில் மனித உடல் ஒன்று மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு துப்பு கிடைத்ததையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டனர்.
விர்ஜினியா மாகாணத்திலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிசார், ப்ரீஸர் ஒன்றைத் திறந்தபோது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
ஆம், நான்கு வயது சிறுவன் ஒருவனின் உடல் அந்த ப்ரீஸருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், Eliel Adon Weaver (4) என்ற அந்த சிறுவனின் உடல், அந்த ப்ரீஸருக்குள் இரண்டரை ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த சிறுவனின் தாய் Dina D. Weaver (48) மற்றும் தந்தை Kassceen Weaver (49) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை எப்படி இறந்தான் என்பது குறித்த தகவல்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்பதால், இப்போதைக்கு உடல் ஒன்றை மறைத்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன..