விலைமதிப்பற்ற முட்டை ஆபரணத்தை விழுங்கிய திருடன்: பொலிஸார் சொன்ன நல்ல செய்தி
புகழ்பெற்ற ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான ஆபரணம் திருடனிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட விலைமதிப்பற்ற நகை
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை 32 வயது நபர் திருடியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

சுமார் US$20,000 மதிப்புள்ள இந்த அழகிய ஆபரணத்தை திருடும் நோக்கத்துடன் திருடன் விழுங்கியதை தொடர்ந்து அதை மீட்பதும் பெரும் சிக்கலுக்கு உள்ளானது.
அசாதாரண சூழ்நிலையை குறிப்பிட்ட பொலிஸார், திருடனின் செரிமான உறுப்புகளில் இருந்து ஆபரணம் இயற்கையாக வெளியேறும் வரை காத்திருப்பதாகவும், இந்த வித்தியாசமான பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.
மீட்கப்பட்ட ஆபரணம்
இந்நிலையில், நகையை விழுங்கிய திருடனிடம் இருந்து இயற்கையான முறையில் வைரம் பதிக்கப்பட்ட டாலர்(Locket) மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த திருட்டு சம்பவமானது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
வெளியான விவரங்களின் அடிப்படையில், திருடப்பட்ட நகையில் 60 வெள்ளை வைரங்கள் மற்றும் 15 நீல நீலக்கற்கள் ஆகியவை பதியப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் NZ$33,585 (அதாவது சுமார் $19,300 அல்லது $14,600) வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |