ஒட்டு சுட்டானில் மலரும் முல்லை கல்விவள நிலையம்
நெதர்லாந்து முல்லை அமைப்பின் உதவியுடன் யாழ் மாவட்ட அமலமரி தியாகளின் பூரண வழிநடத்தலின் கீழ் மலரும் முல்லை என்ற அமைப்பிற்கான புதிய கட்டிடம் ஒட்டுசுட்டானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மலரும் முல்லை
ஒட்டுச்சுட்டானில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கலை கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் முகமாக மலரும் முல்லை என்ற அமைப்பு நெதர்லாந்து முல்லை அமைப்பின் உதவியுடன் யாழ் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்திற்கான திறப்பு விழாவான து கடந்த 30 யூலை 2024 மிகவும் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு அரச அதிபர் முல்லை அமைப்பு நெதர்லாந்து தலைவர் அமலமரிதியாகிகள் யாழ்மாகாண முதல்வர் வைத்தியர்கள் அரச அதிகாரிகள் குருக்கள் கிராம மக்கள் என அதிகளவானனோர் பங்கு பற்றினர்.
குறித்த திட்டத்தினால் 30ற்கு மேற்பட்ட சிறார்கள் ஆங்கில கல்வியினையும் மேலும் கணனி கலாச்சார நடன வகுப்புகழளயும் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் 15 கிராமங்களில் இருந்துவரும் 175 ற்கும் அதிகமான மாணவர்கள் பலம் பெறுகின்றனர்.
இந்நிலையில் எதிர்காலத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்புகளும் இந்த அமைப்பினால் வழங்கப்பட இருக்கின்றது.
இந்த அமைப்பிற்கு நெதர்லாந்து முல்லை அமைப்பினர் மடிக்கணணிகளும் போக்குவரத்து அவசர தேவைகள் கருதி ஒரு மூன்று சக்கர வாகனமும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.