20 மெட்ரிக் டன் தங்கம்., இந்தியாவிற்கு மீண்டும் ஒரு கோல்டன் ஜாக்பாட்
இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்க ஜாக்பாட் அடித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 10 முதல் 20 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) மேற்கொண்ட ஆய்வுகளில், ஒடிசாவில் பல மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக டியோகர் (Adasa-Rampalli), சுந்தர்கர், நவரங்பூர், கேயோன்ஜார், அங்குல் மற்றும் கொராட்புர், ஆகிய மாவட்டங்களில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மயூர்பஞ்ச், மால்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் போத் மாவாட்டங்களில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. ஆனால் உள்ளூர் உற்பத்தி 2020-ல் 1.6 டன் மட்டுமே.
ஒடிசாவில் இந்த கண்டுபிடிப்பு நாட்டின் தங்க இறக்குமதியை குறைக்கும் அளவிற்கு இல்லை என்றாலும், உள்நாட்டு சுரங்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது ஒடிசாவை இந்தியாவின் சுரங்க வளங்களில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gold Deposit Odisha, Odisha gold reserves, India gold discovery 2025, Geological Survey of India, Deogarh gold mining auction, GSI gold exploration, India domestic gold production, India gold