தன்னை கடித்த விஷப்பாம்பை தேடிப் பிடித்து விவசாயி செய்த பயங்கர செயல்! அதிர்ந்து போன கிராமமக்கள்: வெளியான வீடியோ
இந்தியாவில் தன்னைக் கடித்த விஷப்பாம்மை தேடிப் பிடித்து விவசாயி ஒருவர் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிஷா மாநிலம், கேம்பரிபட்டியா கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர்பத்ரா. 45 வயது மதிக்கத்தக்க இவர் விவசாயத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சம்பவ தினத்தன்று இரவு விவசாய வேலைகளை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிய போது, அவர் காலில் ஏதோ பூச்சி கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
அதன் பின் அதை நன்றாக உற்று கவனித்த போது, அது பாம்பு கடி என்பது தெரியவர, உடனே அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று, டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, தன்னைக் கடித்த பாம்பை தேடியுள்ளார்.
அதன் பின் பாம்பு அவர் கண்ணில் பட, உடனே அந்த பாம்பை கையில் பிடித்து, பழிவாங்கும் நோக்கில், அதை தூக்கிய போது, மீண்டும் அந்த பாம்பு அவரை கடிக்க முயன்றதால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கிஷோர்பத்ரா பாம்பை கண்மூடித்தனமாக கடித்துள்ளார்.
அவரின் பற்களுக்கு இடையில் சிக்கிய பாம்பு, பரிதாபமாக உயிரிழந்தது.இது குறித்து கிஷோர்பத்ரா கூறுகையில், தன்னை தீண்டியது கிரைட் வகையை சேர்ந்த விஷப்பாம்பு என்பது எனக்கு தெரியவந்தது.
உடனே ஆத்திரத்தில் அதை தேடிப்பிடித்து, கடித்து கொன்றேன் என்று கூறியுள்ளார். பாம்பு கடித்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் தனது கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.