“வாழும் மனிதநேயம்“ ஒடிசா ரயில் விபத்து- ரத்த தானம் வழங்க குவிந்த மக்கள்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் மக்களுக்கு ரத்த தானம் வழங்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மருத்துவமனையில் வரிசையில் காத்து இருந்தனர்.
ஒடிசா ரயில் விபத்து
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டு இருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி தரம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் இந்த கோர விபத்தில் சிக்கியது.
#OdishaTrainAccident
— TIMES NOW (@TimesNow) June 3, 2023
Latest visuals from the site of the deadly train accident in #Odisha's Balasore. Rescue operations underway
Reportedly, the current death toll stands at 233. pic.twitter.com/NeWevwSSbI
வெள்ளிக்கிழமை இரவு நடந்த மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரத்த தானம் வழங்க வரிசையில் காத்திருந்த மக்கள்
இந்தியாவின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்த தானம் வழங்க அப்பகுதியில் உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
Odisha train accident: People queue up to donate blood for injured in Balasore
— ANI Digital (@ani_digital) June 3, 2023
Read @ANI Story | https://t.co/McDb1XajsF#Odisha #OdishaTrainTragedy #Balasore pic.twitter.com/DlIFwcZmns
நூற்றுக்கணக்கான உள்ளூர் தன்னார்வலர்கள் இரவும் முழுவதும் மருத்துவமனையில் வரிசையில் காத்து இருந்து இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நேற்று ஒருநாள் இரவில் மட்டும் ஒடிசாவின் பாலாசோரில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது வரை கைவசம் 900 யூனிட் ரத்தம் இருப்பதாகவும் அந்த மாநில தலைமை செயலாளர் தகவல் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் இரவு இரத்த தானம் வழங்க மருத்துவமனையில் கூடிய பொதுமக்கள் குறித்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
The top bureaucrat in the eastern Indian state of #Odisha, @PradeepJenaIAS, expresses gratitude to the voluntary blood donors, who queued up at the hospitals last night.#OdishaTrainAccident #CoromandelExpressAccident#Balasore
— WION (@WIONews) June 3, 2023
Track updates: https://t.co/sMQiOpCOty pic.twitter.com/ZjrSDPwkoN