ஒடிசா ரயில் விபத்து! உயிர் தப்பிய நபர் கண்ட திகிலூட்டும் காட்சிகள்
இந்தியாவையே உலுக்கியுள்ள ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒருவர் தான் கண்ட திகில் காட்சிகளை விவரித்துள்ளார்.
மூன்று ரயில்கள் மோதல்
கொல்கொத்தாவிலிருந்து சென்னை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷாவின் Balasore என்னும் இடத்தில் தடம் புரண்டு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியுள்ளது.
தடம்புரண்ட பெட்டிகள் சில, பெங்களுரு - ஹவ்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளன.
வேகமாக வந்த ரயில்கள் மோதிக்கொண்டதில், பெட்டிகள் தூக்கி வீசப்பட, குறைந்தது 233 பேர் பலியாகியுள்ளதாகவும், 900 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
As a passenger on the Coromandel Express from Howrah to Chennai, I am extremely thankful to have escaped unscathed. It probably is the biggest train accident related incident. Thread of how the incident unfolded 1/n
— Anubhav Das (@anubhav2das) June 2, 2023
உயிர் தப்பியவர் கண்ணீர் பேட்டி
இந்நிலையில், இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒருவர், தான் கண்ட பயங்கர காட்சிகளை விவரித்துள்ளார்.
அனுபவ் தாஸ் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் என்றும், அதிர்ஷ்டவசமாக அந்த கோர விபத்தில் தான் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துக்களிலேயே இது மிகப்பெரிய விபத்து என தான் கருதுவதாகத் தெரிவித்துள்ள தாஸ், சிதைந்து கிடந்த குடும்பங்கள், கைகால் இல்லாத உடல்கள், ரயில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளம் என, தான் கண்ட அந்தக் காட்சியை தன்னால் ஒருபோதும் மறக்க இயலாது என்றும், கடவுள் அந்தக் குடும்பங்களுக்கு உதவட்டும், ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் கூறியுள்ளார்.
200 முதல் 250 பேர் வரை உயிரிழந்துவிடந்ததைத் தானே கண்டாதாகவும் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் பொலிசார், தீயணைப்புக் குழுக்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் என மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஒடிஷா முதன்மைச் செயலர் Pradeep Kumar Jena தெரிவித்துள்ளார்.