லைசென்ஸ் இல்லாமல் ஓட்டலாம்., Odysse Racer Neo எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஓடிசி எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
Odysse Racer Neo எனப்படும் இந்த மாடல், மிகவும் தரமான வசதிகளுடன் மற்றும் குறைந்த விலைக்கே கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.52,000 முதல் விலையில் அறிமுகமான இந்த ஸ்கூட்டரை ஓட்ட ஓட்டுநர் உரிமம் அல்லது வாகன பதிவு தேவையில்லை.
இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்கள் ஆகியோருக்கு இது ஒரு சிறந்த விருப்பமாக இருக்கிறது.
முக்கிய அம்சங்கள்:
அதிகபட்ச வேகம்: மணிக்கு 25 கிமீ என கட்டுப்படுத்தப்பட்டதால் உரிமம் தேவையில்லை.
பேட்டரி விருப்பங்கள்: Graphene மற்றும் Lithium-ion வகைகள், முழு சார்ஜில் 90 முதல் 115 கிமீ வரை பயணிக்க முடியும்.
சார்ஜ் நேரம்: 4 மணி முதல் 8 மணி வரை

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
சிறப்பு அம்சங்கள்:
- Keyless Start/Stop, Cruise Control, Repair Mode
- USB சார்ஜிங் போர்ட், LED டிஜிட்டல் மீட்டர்
- City, Reverse மற்றும் Parking modes
- போதுமான boot space
வண்ணங்கள் மற்றும் கிடைக்கும் இடங்கள்:
Fiery Red, Lunar White, Titanium Grey, Pine Green, Light Cyan என 5 வண்ணங்களில் கிடைக்கின்றது.
150-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் ஓன்லைன் வாயிலாக இந்தியாவின் அனைத்து பகுதியிலும் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Racer Neo electric scooter India, Odysse EV launch 2025, No licence electric scooter, Budget electric scooter under Rs 55,000, Graphene battery scooter India, Low-speed EV India 2025, Odysse Racer Neo specs features