அலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான Simple Makeup Look இதோ!
பொதுவாகவே பெண்களுக்கு தன்னை அழகுப்படுத்திக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும்.
அதிலும் அலுவலகத்திற்கு வேலை செய்ய நினைக்கும் பெண்கள் தங்களை எப்போதும் அழகாக காட்டிக்கொள்ள விரும்புவார்கள்.
அலுவலகத்திற்கு மேக்கப் போடலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் நீங்கள் இருக்கின்றீர்களா? போடுங்கள். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் Makeup போடலாம். அதை எப்படி இலகுவாக சிறிய அளவில் செய்யலாம் என பார்க்கலாம்.
உங்களுக்கான Simple Makeup Look
படி 1 முகத்தை சுத்தம் செய்தல்
முதலில் உங்கள் சருமத்தை சுத்தம் செய்துக்கொள்ளவும். சருமத்திற்கு ஏற்ற Face wash ஐ பயன்படுத்தவும். இது இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
1. Moisturize
நிலவும் காலநிலை மாற்றம் எதுவாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் சருமத்தை எப்போதும் Moisturize செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
2. Primer
உங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் Makeup செய்கின்றீர்கள் என்றால், அதன் முதற் படிக்கு Primer முக்கியமாகும். இது Makeup போடுவதற்கு உங்கள் சருமத்தை தயார்ப்படுத்தி தரும்.
3. Sunscreen
உங்கள் சருமத்திற்கு ஒவ்வொரு நாளும் Sunscreen அவசியம். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
படி 2 சருமத்திற்கு concealer
உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறது என்றால் நீங்கள் கட்டாயம் இதை உபயோகிக்க வேண்டும்.
படி 3 கண்ணை அழகுப்படுத்தல்
உங்கள் கண்ணை Makeup செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கண் இமைகள் கருமையாகவும் நீளமாகவும் தோற்றமளிக்க, eyeliner மற்றும் mascara பூச வேண்டும்.
படி 4 கன்னத்தை அழகுப்படுத்தல்
Blush கன்னங்களுக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. peach மற்றும் rose போன்ற வண்ணத்தில் Blush பயன்படுத்திக்கொள்ளவும்.
படி 5 உதட்டு சாயம்
Makeup இன் இறுதி கட்டமாக இருப்பது உதட்டு சாயம். இது பூசுவதன் மூலம் தான் உங்கள் சருமம் பளபளப்பாக தெரியும்.