ஆண் ரஷ்ய வீரர்களை பெண்களிடம் மாதவிடாய் தயாரிப்புகளை கேட்டு வாங்கி வைத்துக்கொள்ளச் சொல்லும் அதிகாரி: பரபரப்பு வீடியோ
ரஷ்ய பெண் அதிகாரி ஒருவர், போருக்குச் செல்லும் ரஷ்ய ஆண் வீரர்களிடம், மாதவிடாய்க்கால தயாரிப்புகளை வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்கிறார்.
அதாவது, போருக்குச் செல்லும் படைவீரர்களுக்கு கொடுத்து அனுப்ப மருத்துவ உபகரணங்கள் முதலான அடிப்படை விடயங்கள் கூட ரஷ்யாவிடம் போதுமான அளவில் இல்லை.
ரஷ்ய பெண் அதிகாரி ஒருவர், உக்ரைனுக்கு புதிதாக போருக்குச் செல்லும் ரஷ்ய ஆண் வீரர்களிடம், தங்கள் மனைவிகள், காதலிகள் மற்றும் தாய்மாரிடமிருந்து மாதவிடாய்க்கால தயாரிப்புகளை வாங்கிவைத்துக் கொள்ளச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் அதிகாரி, உக்ரைனுக்குச் செல்வதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரஷ்யப் படைவீரர்களிடம் பல்வேறு விடயங்களை சேகரித்துவைத்துக்கொள்ளும்படி கூறுகிறார்.
அதாவது, இராணுவம் உங்களுக்குச் சீருடையும் ஆயுதங்களும்தான் கொடுக்கும், மற்றவற்றை நீங்கள்தான் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
Unbelievable video. Russian officer telling newly mobilized men they will need to source their own sleeping bags, med packs. Tells them to go buy tampons from pharmacies to use as bandages.
— Patrick Reevell (@Reevellp) September 27, 2022
“The only thing the army gives you in uniforms, armor. That’s it.”pic.twitter.com/zwttL586zu
அப்போது, அந்த வீரர்களை, தங்கள் மனைவிகள், காதலிகள் மற்றும் தாய்மாரிடமிருந்து மாதவிடாய்க்கால தயாரிப்புகளை வாங்கிவைத்துக் கொள்ளச் சொல்கிறார் அந்தப் பெண் அதிகாரி. மாதவிடாய் தயாரிப்புகள் எதற்காக தெரியுமா என கேட்கிறார் அவர்.
அவர்கள் திகைக்க, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உங்கள் உடலில் காயம் ஏற்படுமானால், அந்த இடத்தில் டாம்பூன்களை (sanitary napkin) வைத்து திணித்தால், அவை இரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி அந்த குண்டுக் காயத்தை அடைத்துவிடும். அதனால், காயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும் என்கிறார் அவர்.
அதாவது, உக்ரைன் போருக்காக தொடர்ந்து படைவீரர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா.
ஆனால், போருக்குச் செல்வதற்காக அந்த படைவீரர்களுக்கு கொடுத்து அனுப்ப, காயங்களுக்குக் கட்டுப்போட உதவும் பேண்டேஜ் போன்ற அடிப்படை விடயங்கள் கூட இல்லை என்பதை இந்த வீடியோ காட்டுவதாக கருதப்படுகிறது.