கொரோனா பரிசோதனைக்கு இளைஞரை சரமாரியாக அடித்து இழுத்துச்சென்ற அதிகாரிகள்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி
இந்தியாவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மறுத்த இளைஞரை மாநகராட்சி அதிகாரிகள் சரமாரியாக அடித்த இழுத்தச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பெங்களுர பெருநகர மாநகாரட்சிக்கு உட்பட்ட nagarathpet பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சாலையிலே அதிகாரிகள் சோதனை மையம் ஒன்றை அமைத்துள்ளனர்.
இதன் போது அப்பகுதியைச் சேரந்த இளைஞரை ஒருவரை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் அணுகியதாக தெரிகிறது.
பரிசோதனைக்கு உட்பட இளைஞர் மறுத்த நிலையில், பெருநகர மாநகராட்சி அதகாரிகள் இளைஞரை சரமாரியாக அடித்து இழுத்துச்சென்று பரிசோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த காட்சியை சம்பவயிடத்தில் இருந்து ஒருவர் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.
Random testing for covid19 leads to altercations in Bengaluru, BBMP officials seen manhandling a youth who refused to undergo a random #COVID19 test near nagarathpet. pic.twitter.com/FGcLXj8wUv
— Deepak Bopanna (@dpkBopanna) May 24, 2021
குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெங்களுர பெருநகர மாநகாரட்சி ஆணையர் சம்பவம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.