கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு: ரெசிபி இதோ
கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.
சிலருக்கு கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி அனைவராலும் விரும்பி உண்ணப்படும்.
அந்தவகையில், சுவையான இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- வேர்க்கடலை- 3 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- 5 ஸ்பூன்
- கத்திரிக்காய்- 15
- வெள்ளை எள்- 3 ஸ்பூன்
- துருவிய தேங்காய்- 4 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 6
- கடுகு- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 1 கைபிடி
- பூண்டு- 15
- கருவேப்பிலை- 2 கொத்து
- தக்காளி- 5
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- 1½ ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- புளி- எலுமிச்சை அளவு
- உப்பு- தேவையான அளவு
- வெல்லம்- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கத்திரிக்காயை கழுவி அதன் மேல் கீறல் போடவும், பின் ஒரு வாணலில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நல்லெண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம், கடலை பருப்பு, வேர்க்கடலை, கொத்தமல்லி விதை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அதில் வெள்ளை எள் சேர்த்து பொரிந்ததும் அடுப்பை அனைத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்தது வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் 4 ஸ்பூன் நல்லலெண்ணெய் சேர்த்து அதில் காய்ந்த மிளகாய் , கடுகு சேர்த்து பொரிந்ததும் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் அதில் அரைத்து வைத்திருந்த தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
பின் இதில் மஞ்சள் தூள், மல்லி தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுத்து கரைத்து வைத்திருந்த புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இதனைத்தொடர்ந்து இதில் வதக்கி வைத்திருந்த கத்திரிக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு, வெல்லம் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |