ரஷ்ய மீதான உக்ரைன் வான்வழித் தாக்குதல் இதற்கு வழிவகுக்கும்! புடின் அரசு காட்டம்
ரஷ்ய மீதான உக்ரைன் வான்வழித் தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தடங்கலை ஏற்படுத்தும் என ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கீவ் மற்றும் Chernihiv நகரிலிருந்து படைகளை வெளியேற்றி வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவின் Belgorod நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகாப்டர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக அந்நகர கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.
மோசமான தலைமையை புறக்கணிப்போம்! இலங்கை மக்களுக்கு ஹசரங்க அழைப்பு
இதனிடையே, காணொளி காட்சி மூலம் ரஷ்யா-உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீதான உக்ரைன் தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான மேலதிக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தடங்கலை ஏற்படுத்தும் என ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov கூறினார்.
மேலும், எண்ணெய் கிடங்கு மீதான தாக்குதுல் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கான சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை என Dmitry Peskov தெரிவித்துள்ளார்.