இறுதி கட்டத்தை எட்டும் உக்ரைன் சமாதான ஒப்பந்தம்... எண்ணெய் விலை வீழ்ச்சி
ரஷ்யா-உக்ரைன் சமாதான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாலும், அமெரிக்க டொலர் வலுப்பெறுவதாலும், திங்கட்கிழமை எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து, கடந்த வாரத்தை விட இழப்புகள் நீடித்தன.
தடைகளை நீக்கி
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 14 cents அல்லது 0.22 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 62.42 டொலராக இருந்தது. மேற்கு டெக்சாஸ் இடைநிலை 15 cents அல்லது 0.26 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 57.91 டொலராக இருந்தது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு கச்சா எண்ணெய் விலையும் 3 சதவீதம் சரிவடைந்து, அக்டோபர் 21 ஆம் திகதிக்கு பின்னர் மிகக் குறைவான விலையைப் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, ரஷ்யா-உக்ரைன் சமாதான ஒப்பந்தமானது ரஷ்யா மீதான தடைகளை நீக்கி, முன்னர் அனுமதி மறுக்கப்பட்ட எண்ணெய் விநியோகம் மொத்தம் சந்தையை நிரப்பக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் சமாதான ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் கடும் அழுத்தமளிப்பதால், மிக விரைவிலேயே சந்தையில் ரஷ்ய எண்ணெய் நிரம்பக் கூடும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.
மேலும், சமாதான ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததும், ரஷ்யா மீதான தடைகள் அனைத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் தாமதமின்றி நீக்கும் என்றும், இதனால் ரஷ்யாவின் Rosneft மற்றும் Lukoil நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

உலகின் இரண்டாவது
ட்ரம்ப் நிர்வாகத்தின் தடையால் கிட்டத்தட்ட 48 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் நகர முடியாமல் கடலில் சிக்கியுள்ளது. இதனிடையே, அமெரிக்காவும் உக்ரைனும் சமாதான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்ததாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் சமாதான ஒப்பந்தமானது ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி தொடர்பான பொருளாதாரத் தடைகளைத் திரும்பப் பெறக்கூடும். உக்ரைன் மீதான் போர் நீடிக்கும் நிலையிலும்,

2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா இருந்தது. சந்தைக்கு அதிக எண்ணெய் வரும் என்ற அச்சுறுத்தலும், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புக்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அடக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |