அந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவோம்: இந்தியா மீண்டும் உறுதி
தடைகளுக்கு உட்படாத நாடுகளிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் என்றும், அதில் அமெரிக்க - இந்திய ஒப்பந்தம் தடையாக இருக்காது என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒப்புக்கொண்டால்
அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டால், இந்தியப் பொருட்களுக்கான வரியை தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத தண்டனை வரிகளை விதித்த பிறகும் கூட, இந்தியா தினமும் சுமார் 1.5 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இது இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இந்த நிலையில், விலையின் அடிப்படையில், தடைகளுக்கு உட்படாத உலக நாடுகளிடமிருந்து இந்தியாவும் கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்யும் என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரத் தடைகள் அமுலில் இருந்தபோது நாங்கள் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கவில்லை. தற்போது பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதால், நாங்கள் அங்கிருந்து எண்ணெய் வாங்குவோம் எனவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 பில்லியன் டொலருக்கும்
வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வரிகளையும் வரியல்லாத தடைகளையும் பூஜ்ஜியமாகக் குறைப்பது உட்பட பல நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிபொருள், தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரி உட்பட 500 பில்லியன் டொலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாகவும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனவரி-நவம்பர் மாதங்களில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 15.88 சதவீதம் அதிகரித்து 85.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் 46.08 பில்லியன் டொலராக இருந்தன என்று இந்திய அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |