போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தம்? எண்ணெய் எரிவாயு விலை வீழ்ச்சி
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தம் செய்ய நெருங்கிவிட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எண்ணெய் எரிவாயு விலை வீழ்ச்சி
ஈரான் அமெரிக்கப் போரைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய்ப் போக்குவரத்து குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை சுமார் 40 சதவிகிதம் வரை உயர்ந்தது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 10 வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நேரம் நெருங்கிவிட்டதாக அமெரிக்கா நம்புகிறது என Axios என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது, எரிவாயு விலையும் சரிந்துள்ளது.
இப்படி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ள நிலையிலும், 36 நாடுகளில் இயங்கிவரும் Equinor என்னும் எரிசக்தி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான Torgrim Reitan என்பவர், ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தாலும், எண்ணெய் விலை பழைய நிலைக்குத் திரும்ப ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும், எரிவாயு விலை பழைய நிலைக்குத் திரும்பவோ, மேலும் கூடுதல் காலம் பிடிக்கலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |