ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை ரத்துசெய்து, அந்நாடு அளித்த கடைசி நேர ஒப்புதலையும் நிராகரித்ததைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டுடனான போர் குறித்து மூன்று கடினமான தெரிவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மூன்று வழிகள்
இஸ்ரேலின் அழுத்தத்தால் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போரில் வெற்றிபெறவும் ஈரானை ஓர் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்யவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் உறுதியாக உள்ளார்.

இதன் அடிப்படையில், அவர் மூன்று வழிகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம்: மோதலைத் தீவிரப்படுத்துவது, ஹார்முஸ் நீரிணையை மூடுவதைப் பயன்படுத்தி ஈரானை ஒரு சமரசத்திற்கு இணங்கச் செய்ய அழுத்தம் கொடுப்பது, அல்லது தாம் விரும்பாத ஒரு ஒப்பந்தத்தையே ஏற்றுக்கொள்வது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஞாயிறு காலையில், ஈரானின் எண்ணெய் குழாய்கள் இன்னும் மூன்று நாட்களில் வெடித்துச் சிதறும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவிக்கையில், ஈரானில் என்ன நிகழ்கிறது என்றால், அந்தக் குழாய்கள் உள்ளிருந்தே வெடித்துச் சிதறப் போகிறது. இயந்திர ரீதியாகவும் சரி, பூமிக்குள்ளும் சரி, ஏதோ ஒன்று நிகழ்ந்து, அது அப்படியே வெடித்துவிடும்.
அவ்வாறு நிகழ்வதற்கு இன்னும் சுமார் மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக ஈரானியர்கள் கூறுகிறார்கள் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவை வெடித்துச் சிதறினால், தற்போதைய நிலையில் அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்றார்.

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கும் ஒரு மணி நேரம் முன்னர் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், அவர் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு நிபந்தனையை முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தம்
ஆனால், ஈரானின் நிர்வாகத்தில் கடும் உட்கட்சிப் பூசலும் குழப்பமும் நிலவுகிறது. யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், போரை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் விரும்பினால், அவர்களே பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடைந்தார். மேலும், சனிக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
அத்துடன், போர் தொடர்பில் ஒரு முடிவு எட்டப்படும் வரை பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளில் ஈரான் ஈடுபடும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |