சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை
Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்
மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய மோதலாக சவுதி அரேபியாவின் நகரங்களை குறி வைத்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெற்கு சவுதி அரேபியாவின் நான்கு நகரங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்து இருப்பதாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் மரிப் (Marib) நகரை குறிவைத்து சவுதி படையினர் 4 வானவழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.

அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
ஏற்கனவே உள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கூடுதலாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த மோதல் காரணமாக பல வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
பிரித்தானிய நேரப்படி காலை 7.30 மணிக்கு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.25 டொலர்கள்(1.3%) உயர்ந்து 98.25 டொலராக விற்பனை செய்யப்பட்டது.
வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்த விலை 98.79 டொலராக உயர்ந்தது. இது ஜூலை 24ம் திகதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.
கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலையானது கடும் ஏற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |