அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரிப்பு., எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், உலக எண்ணெய் சந்தையில் விலை திடீரென உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, ஈரானின் சரக்கு கப்பலை கைப்பற்றியதையடுத்து ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 20) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.32 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 95.19 டொலராகவும், அமெரிக்க WTI எண்ணெய் 5.92 சதவீதம் உயர்ந்து 88.81 டொலராகவும் பதிவானது.
கடந்த வெள்ளிக்கிழமை 9 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த உயர்வு சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான், தற்காலிகமாக ஹார்முஸ் நீரிணையை திறந்ததாக அறிவித்திருந்தாலும், 24 மணி நேரத்திற்குள் IRGC படைகள் சில எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கப்பல் உரிமையாளர்கள் மீண்டும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சுமார் 10 முதல் 11 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால், உலகளாவிய சந்தை அடிப்படைகள் மோசமடைந்துள்ளன. அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கைகளை தொடர்ந்துள்ள நிலையில், ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்துள்ளது.
ஹார்மசு நீரிணை உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதால், அதன் மூடல் உலக பொருளாதாரத்துக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |