பற்றியெரியும் ஈரான்... தீயாக உயரும் எண்ணெய் விலை
முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான ஈரானில் தொடரும் வன்முறை மற்றும் போராட்டங்கள், விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் மற்றும் வெனிசுலா விவகாரம் உள்ளிட்டவையால், செவ்வாயன்று எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தன.
முதன்மையான காரணி
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.06 டொலர் அல்லது 1.7% உயர்ந்து 64.93 டொலராக இருந்தது. இது நவம்பர் மாத நடுப்பகுதிக்குப் பிறகு அதன் மிக உயர்ந்த மட்டத்தில் நீடிக்கிறது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெயின் விலை 1.02 டொலர் அல்லது 1.7% உயர்ந்து 60.52 டொலராக இருந்தது.
புவிசார் அரசியல் காரணிகளுக்கு எதிராக எண்ணெய் சந்தை விலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றே எண்ணெய் விலை தொடர்பான ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஏற்றுமதிகள் தாமதமாவது, வெனிசுலாவைச் சுற்றியுள்ள சிக்கல்கள், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கிரீன்லாந்து குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டைவை முதன்மையான காரணிகளாக பட்டியலிட்டுள்ளனர்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரான், பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே, ஒரு மனித உரிமைகள் அமைப்பு நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்கும் ஆயிரக்கணக்கானோரின் கைதுக்கும் வழிவகுத்ததாகக் கூறியுள்ளது. இது இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் எச்சரிக்கை விடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கூடுதல் வரிகளை விதித்து
மட்டுமின்றி, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தகத்திற்கும் 25% வரி விகிதத்திற்கு உட்படுத்தப்படும் எனவும் திங்களன்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் தனது எண்ணெயில் பெரும்பகுதியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனிடையே, அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக ரீதியான ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், சீனா மீது கூடுதல் வரிகளை விதித்து அமெரிக்கா மீண்டும் நிலைமையைச் சீர்குலைக்க விரும்புமா என்பது குறித்த கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஈரான் மற்றும் வெனிசுலாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகளாவிய விலை அளவை ஆதரித்ததால், மத்திய கிழக்கு அளவுகோலான துபாயில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் பிரீமியம் செவ்வாய்க்கிழமை ஜூலை மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்ததாக பதிவானது.
ஈரானில் நிலவும் அமைதியின்மையால், கச்சா எண்ணெய் விலையில் பேரலுக்கு சுமார் 3-4 டொலர் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கத்தியத் தடைகளுக்கு உட்பட்ட சுமார் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கராகஸ் தயாராகி வருவதாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |