கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு: ஈரான் - அமெரிக்கா மோதலை தொடர்ந்து முதலீட்டாளர்கள் கவலை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புதிய மோதல்கள் வெடித்துள்ள நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் கச்சா எண்ணெயின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மோதல் காரணமாக விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர் இடையே ஏற்பட்டதை அடுத்து இந்த விலையுயர்வு நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலை 2.12 மணியளவில் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியர் ஆகஸ்ட் மாத விநியோக ஒப்பந்தங்கள் 3.51% ஆக அதிகரித்து பீப்பாய் ஒன்றுக்கு 72.91 டொலராக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்(brent Crude) செப்டம்பர் மாத கணக்கு முடிப்பு ஒப்பந்தங்கள் 3.48% அதிகரித்து பீப்பாய் ஒன்றுக்கு 76.74 டொலராக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலையுயர்வு எரிசக்தி நிலைத்தன்மையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கவலையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |