நாஸ்ட்ரடாமஸ் கணித்தது போல 7 நாட்களில் ஆயில் டேங்கர் விபத்து! ஆனால் இது முதல் முறையல்ல
புதிய நாஸ்ட்ரடாமஸ் அண்மையில் கணித்த சம்பவமும் நடைபெற்று முடிந்தது.
நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது
இங்கிலாந்தை சேர்ந்த கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் என்பவர் நாடி ஜோதிடத்தின் மூலம் எதிர்காலத்தில் நடைபெறும் விடயங்களை முன்கூட்டியே கணித்து சொல்வார்.
இவர் கணித்த பல விடயங்கள் அப்படியே நடக்கிறது என்று சொல்கிறார்கள். அந்தவகையில் கடந்த மார்ச் 4-ம் திகதி யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், ஆயில் டேங்கர் ஒன்று விபத்தில் சிக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியபடியே அடுத்த 7 நாட்களில் மார்ச் 11-ம் திகதி அன்று விபத்து ஒன்று நடந்தது.
வடக்கு கடலில, 18,000 டன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற அமெரிக்கக் கொடியிட்ட எம்வி ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கருடன் எம்வி சோலாங் சரக்குக் கப்பல் மோதியது.
இவர் கூறியது நடப்பது முதல் முறையல்ல. முன்னதாக, இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறப்பு, கொரோனா பேரிடர், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மீது துப்பாக்கிச்சூடு ஆகிய விடயங்களை கணித்திருந்தார்.
இந்தியா வந்த கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர், ஜோதிடத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டார். தற்போது, மனைவியுடன் சேர்ந்து எதிர்கால விடயங்களை கணித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |