ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல்
ஈரான் கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்ட பாதையை விட்டு விலகிய எண்ணெய் கப்பல், ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடியில் மோதியதால் வெடித்து சிதறியது.
இந்த சம்பவம் உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் நடந்துள்ளது.
இந்த கப்பல் குறித்து முழுமையான விவரங்கள், அதன் பெயர், சரக்கு, இலக்கு, மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த வெடிப்பு காரணமாக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெய் இங்கு வழியாக உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், இந்த வெடிப்பு சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
வளைகுடா நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தங்கள் எரிசக்தி விநியோக பாதைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்ற அச்சத்தில் உள்ளன.
சம்பவம் தொடர்பாக ஈரான் அரசு, “கப்பல்கள் பாதுகாப்பான பாதையை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |