கண்ணிவெடிகளில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையாக தீக்கிரையான அவலம்
Oil Tanker Explodes after struck naval mine: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று தீப்பிடித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்து
ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் “எல் கையா”(El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியது.
கண்ணிவெடிகள் வெடித்ததில் எண்ணெய் கப்பலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியது.
வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும் தோல்வியடைந்ததாக திங்கட்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீயில் எரிந்து வருகிறது.
ஈரானிய கடற்படை இதுவரை இந்த கப்பல் விபத்து தொடர்பான துல்லியமான நேரத்தை வெளியிடவில்லை.
கப்பல் மற்றும் பணியாளர்கள் நிலைமை
தரவுகளின் படி, “எல் கையா” கப்பல் சுமார் 48,000 டன் எடை கொள்ளளவு கொண்டது என்றும் விபத்து ஏற்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 13 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மாலுமி ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.