கண்ணி வெடிகளில் சிக்கி வெடித்த எண்ணெய் கப்பல்: ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்
Oil Tanker Strikes Naval Mine in Strait of Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் சிக்கி கச்சா எண்ணெய் கப்பல் விபத்திற்குள்ளாகியுள்ளது.
கண்ணி வெடிகளில் சிக்கிய எண்ணெய் கப்பல்
ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்கப்படாத மற்றும் ஆபத்தான கடல் வழியாக பயணித்து வெளியேற முயன்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்து விபத்துக்குள்ளானது.
கண்ணி வெடிகள் வெடித்து சிதறிய உடன் கப்பல் பலத்த சேதமடைந்ததுடன் கப்பலின் பெரும்பகுதி தீப்பற்றி எரிந்தது.
🚨 IRAN/USA WAR NEWS: An Iranian naval oil tanker struck a mine and exploded in the Strait of Hormuz https://t.co/qRBZncWYH7
— MAGA Cult Slayer (@MAGACult2) October 11, 2026
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர காவல்படை, விபத்துக்கு முன்னதாக அந்த கப்பல் அதிலுள்ள வழிகாட்டி அமைப்புகள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை அந்த கப்பல் வேண்டுமென்றே செயழிலக்க செய்ததாக தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது ஏற்பட்ட தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடலோர பகுதி மக்கள் பலரும் இந்த விபத்தை தூரத்தில் இருந்தே பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே உலக வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

கண்ணிவெடிகள் தொடர்பான தற்போதைய இந்த பாதுகாப்பு அச்சம், வணிக கப்பலின் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அத்துடன் இவ்வழியாக பயணிக்கும் வணிக கப்பலின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளது.
ஈரானின் உடன்படிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்து போகும் வரை இந்த வர்த்தக பாதை திறக்கப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.