கடல் கண்ணி வெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
Oil tanker striking sea mine in strait of hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணி வெடியில் சிக்கி மற்றொரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்துள்ளது.
கண்ணி வெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்
ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளில் சிக்கி எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய குடியரசு கடற்படையின் விமானப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கண்ணி வெடிகளில் சிக்கி தீப்பிடித்த இந்த கப்பல் முன்னதாக விடுக்கப்பட்ட அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்து தடை விதிக்கப்பட்ட பகுதி வழியாக சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் வரையறுக்கும் கடல்சார் வழித்தடங்களை புறக்கணிக்கும் எந்தவொரு கப்பல்களுக்கும் இதுதான் நிலைமை என்றும் ஈரான் கடற்படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) டேங்கர்களை ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த சரக்கு கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் சிக்கி வெடிப்பு விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஆபத்தான இந்த வழித்தடத்தில் பயணிக்க அந்த கப்பல் முடிவு செய்ததே இந்த விபத்திற்கான முக்கிய காரணம் என்று ஈரான் கடற்படை குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.