எண்ணெய் டேங்கர் மீது மோதிய ரோல்ஸ் ராய்ஸ்; காரில் இருந்தவர்கள் உயிர்பிழைப்பு
இந்தியாவின் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் எண்ணெய் டேங்கர் மீது ரோல்ஸ் ராய்ஸ் கார் மோதியது.
இந்த விபத்தில், டேங்கரில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், சொகுசு காரில் பயணம் செய்த 3 பேர் உயிர் தப்பினர்.
தில்லி-மும்பை-பரோடா விரைவுச் சாலையில் உம்ரி கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல், தவறான பாதையில் வந்த எண்ணெய் டேங்கர் வேகமாக வந்த ரோல்ஸ் ராய்ஸ் மீது மோதியது. டேங்கர் கவிழ்ந்ததில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது.
இதற்கிடையில், ரோல்ஸ் ராய்ஸின் பின்னால் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்த உறவினர்கள் விரைந்து வந்தனர். டேங்கர் மீது மோதி எரிந்த சொகுசு காரில் சிக்கிய 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
சண்டிகரை சேர்ந்த திவ்யா மற்றும் தஸ்பீர் மற்றும் டெல்லியை சேர்ந்த விகாஸ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மறுபுறம், ரோல்ஸ் ராய்ஸ் மீது மோதியதால் கவிழ்ந்த எண்ணெய் டேங்கரில் டிரைவர் ராம்ப்ரீத் மற்றும் அவரது உதவியாளர் குல்தீப் இறந்தனர். உயிரிழந்த இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் இருந்த மற்றொரு நபர் கவுதமன் காயமடைந்ததாக கூறினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |