Electric scooter-களுக்கு ரூ.18,000 வரை விலை குறைப்பு.., Okaya நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு
Okaya Electric வாகன நிறுவனம் தனது Electric scooter-களுக்கு ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த சலுகை விலை வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து Okaya-வின் Electric scooter மாடல்கள் இப்போது ரூ.74,899-ல் தொடங்குகின்றன.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 75km ரேஞ்சை பெற முடியும்.
இந்த நிறுவனத்தின் Entry-level மாடலான Freedum slow speed-ன் விலை இப்போது ரூ.74,899 என்ற விலையில் தொடங்குகிறது.
அதே சமயம் Faast F4-ன் விலை இப்போது ரூ.1,37,990-லிருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.1,19,990 என்ற விலையில் கிடைக்கிறது.
தள்ளுபடிக்கு பிறகு நிறுவனத்தின் Faast F3 மாடலின் விலை ரூ.1,09,990-ஆகவும், Motofaast-ன் விலை ரூ.1,28,999-ஆகவும், Faast F2F-வின் விலை ரூ.83,999-ஆகவும், Faast F2B-ன் விலை ரூ.93,950-ஆகவும், Faast F2T-ன் விலை ரூ.92,900-ஆகவும் உள்ளது.
Okaya EV Electric scooter-களில் LFP Battery பொருத்தப்பட்டுள்ளது, இது இந்திய வானிலை நிலைமைகளுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
சில Electric scooter நிறுவனங்கள் மட்டுமே LFP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது NMC Battery-களுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.
LFP Battery-கள் மிகவும் பாதுகாப்பானவை, அதிக வெப்பநிலைகளில் நன்றாகச் செயல்படும்.
அனைத்து Okaya Electric scooter-களிலும் BLDC Hub motor பொருத்தப்பட்டுள்ளது, இது AIS 156 Amendment III Phase 2-ன் கீழ் ICAT சான்றளிக்கப்பட்டது, வலுவான IP67 Waterproof மற்றும் Dust-resistance electric scooter-களுடன் ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பானது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |