லண்டனில் Ola cabsக்கு ஒப்புதல்., Uber, Bolt-க்கு கடும் சவால்
இந்தியாவில் வெற்றிகரமாக மிகப்பாரிய அளவில் இயங்கிவரும் Ola Cabs, விரைவில் அதன் சேவையை பிரித்தானிய தலைநகரமான லண்டனில் தொடங்கவுள்ளது.
ANI டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பாரிய ride-hailing தளமான Ola cabs, தனியார் வாடகை வாகனங்களை (PHV) தொடங்க லண்டனின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
இது லண்டனில் ஏற்கெனவே இயங்கிவரும் Uber Technologies Inc. மற்றும் Bolt ஆகிய சவாலாக மாறவுள்ளது.
Bolt நிறுவனம் கடந்த ஜூன் மாதம் தான் அதன் சேவையை தொடங்க Transport For London-லிருந்து உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Ola UK Pvt. Ltd லண்டன் முழுவதும் PHV வாகனங்களை இயக்குவதற்கு TFL-இலிருந்து ஒரு வருட கேரேஜ் உரிமத்தைப் பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் Uber-க்கு Ola மிகப்பாரிய அச்சுறுத்தலாக மாறும் என்று Morgan Stanley ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில் Ola மற்ற ஆப்-அடிப்படையிலான டாக்ஸி ஆபரேட்டர்களை விட அதிக மூலதனத்தை திரட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |