Ola Electric -ன் e-Auto Rickshaw விரைவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
கால்டாக்சி சேவை ஒருங்கிணைப்பாளராக இருந்து, பிறகு மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளராக பிரபலமடைந்த Ola நிறுவனம், இப்போது மற்றொரு படி முன்னேறியுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஹி (Raahi) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த electric autorickshaw இம்மாத இறுதியில் சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.
Olaவின் e-Rahi Rickshaw, Mahindra Trio, Piago Ape e-City மற்றும் Bajaj RE போன்ற ஆட்டோ ரிக்ஷாக்களுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வணிக வாகன உற்பத்தி துறையில் நுழைவதற்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் ஜிகா தொழிற்சாலை உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட உள்ளது.
முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்
ஓலாவின் இ-ஆட்டோ ரிக்ஷாவும் அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும், ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தில் மாற்றங்கள் இருக்கலாம் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முன்வரவில்லை.
மஹிந்திரா, பியாஜியோ மற்றும் பஜாஜ் ஆட்டோ தயாரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை அந்தந்த இ-ஆட்டோ ரிக்ஷாக்களின் மாறுபாடுகளைப் பொறுத்தது.
கடந்த ஆண்டு (2023) 5.80 லட்சத்துக்கும் அதிகமான இ-ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனையாகியுள்ளதாக மத்திய அரசின் போக்குவரத்து இணையதளமான Vahan தெரிவித்துள்ளது. இது 2022-ஆம் ஆண்டை விட 66 சதவீதம் அதிகம்.
2023-ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை மின்சார ஆட்டோ ரிக்ஷாக்களாகும்.
இந்தியில் ராஹி என்றால் போக்குவரத்து வாகனம் என பொருள். Ola Electric IPO மூலம் பங்குச் சந்தைகளில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. ஐபிஓவுக்குச் செல்வதற்காக கடந்த டிசம்பரில் SEBI-யிடம் DRHP வரைவு சமர்ப்பித்தது.
Ola Electric நிறுவனம், ஐபிஓ மூலம் ரூ.5,500 கோடி திரட்டுவதன் மூலம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |