ரூ. 20,000 தள்ளுபடி., புதிய டிசம்பர் சலுகையில் ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
மக்கள் இனி பெட்ரோல் பைக்குகளை மறந்துவிடும் வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் நிறுவனங்களும் பிரமாண்ட சலுகைகளை அறிவித்து பயனர்களை கவர்ந்து வருகின்றன. இந்தியாவின் மிகப்பாரிய EV நிறுவனமான Ola சமீபத்தில் மின்சார வாகன பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
Ola நிறுவனம் அதன் End ICE Age திட்டத்தை விரைவுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, 'December To Remember' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரம் இன்று (டிசம்பர் 3-ஆம் திகதி) முதல் தொடங்கும். இதன் ஒரு பகுதியாக, ஓலா நிறுவனம் எஸ்1 எக்ஸ் பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகப்பாரிய சலுகையை வழங்குகிறது. அதாவது, மொத்தம் ரூ. 20,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதனால் இந்த Ola S1X+ ஸ்கூட்டரை ரூ. 89,999க்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பை Ola அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இதன்மூலம், மக்கள் Internal Combustion Engine பைக்குகளுக்கு பதிலாக அதே விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி பயன்படுத்த Ola அதன் வழியில் முயற்சிக்கிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ ரேஞ்சு
Ola S1 X Plus 2 வாட் EV ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்த செயல்திறன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த சவாரியை வழங்குகிறது.
Ola S1 X Plus ஸ்கூட்டி 3kwh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் திறமையான 6kW மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0-40 கிமீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.
இதனிடையே, நவம்பர் மாதத்தில் 30,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்து ஓலா எலக்ட்ரிக் புதிய சாதனை படைத்துள்ளது.
கூடுதல் சலுகை., EMI திட்டம்
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு நிதிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ. 5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எளிதான EMIகள் மூலம் பணம் செலுத்துவதற்கான விருப்பமும் வழங்கப்படுகிறது.
பூஜ்ஜிய முன்பணம் மற்றும் பூஜ்ஜிய செயலாக்கக் கட்டணங்களுடன் 6.99 சதவீத மலிவு வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஓலா சமீபத்தில் தனது S1 போர்ட்ஃபோலியோவை ஐந்து ஸ்கூட்டர்களாக விரிவுபடுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ola Electric, Ola S1 X+ e-scooter price, Ola December to Remember campaign, Ola S1 X Plus, EndICEAge