ரூ. 2 கோடி மதிப்பில் வெளியான Tesla Cybertruck! சொன்ன வார்த்தையை மீறிய எலான் மஸ்க்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா சைபர்ட்ரக்கின் விலையை டெஸ்லா நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
டெஸ்லா சைபர்ட்ரக்கின் விலை 60,990 அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 2 கோடி) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை 2019-ல் CEO Elon Musk மேற்கோள் காட்டிய விலையை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம். இந்த சைபர்ட்ரக் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஒரே நாளில் ரூ.54,000 கோடி சொத்து அதிகரிப்பு., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டாப்-20க்குள் நுழைந்த அதானி
டெஸ்லா சைபர்ட்ரக் மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றின் விலை இலங்கை பணமதிப்பில் ரூ.2 கோடி முதல் ரூ.3.27 கோடி வரை இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலோன் மஸ்க் தனது சைபர்ட்ரக் சாதாரண டிரக்கை விட சிறந்தது என்றும் ஸ்போர்ட்ஸ் காரை விட வேகமானது என்றும் கூறுகிறார். இந்த சைபர்ட்ரக் ஒரு எதிர்கால வடிவமைப்பு என்று எலோன் மஸ்க் கூறினார்.
சைபர்ட்ரக்கின் ஆல்-வீல் டிரைவ் வகை, அதாவது சைபர்ட்ரக்கின் உயர்தர செயல்திறன் வகையான 'Cyberbeast' அடுத்த ஆண்டு கிடைக்கும் என டெஸ்லாவின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 80,000 டொலர் முதல் 1,00,000 டொலர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்...
2019ல், சைபர்ட்ரக் சுமார் 40,000 டொலர்கள் விலையில் சந்தையில் வரும் என்று எலோன் மஸ்க் கணித்திருந்தார். இதற்குப் பிறகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் 100 டொலர் செலுத்தி முன்பதிவு செய்தனர். சந்தைக்கு வர கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது.அத்துடன் விலையும் மிக அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, சைபர்ட்ரக் ஹை ரேஞ்ச் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 547 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும்.
2025-ஆம் ஆண்டில் டெஸ்லா சைபர்ட்ரக் ஆண்டுக்கு சுமார் 250,000 யூனிட் உற்பத்தியை எட்டும் என்று எலோன் மஸ்க் நம்புகிறார். சைபர் டிரக் Ford’s F-150 Lightning, Rivian Automotive’s R1T மற்றும் General Motors’ Hummer EV ஆகியவற்றுடன் போட்டியிடும்.
சைபர்டிரக் அம்சங்கள்
இந்த காரில் டெஸ்லா அற்புதமான அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தை வழங்கும். இந்த கார் 845 ஹெச்பி ஆற்றலை வழங்கும். இது வெறும் 2.6 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த காரில் 15 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
tesla cybertruck price 2023, Elon Musk Tesla Cybertruck starting price, Tesla Cyberbeast Launch date, Tesla Cybertruck Launched, Tesla Cybertruck cost, Tesla Cybertruck delivery