புதிய 500 திர்ஹாம் பணத்தாளை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கி புதிய 500 திர்ஹாம் கரன்சி நோட்டை வெளியிட்டுள்ளது.
COP 28 காலநிலை உச்சி மாநாடு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட இந்த பணத்தாள் நவம்பர் 30 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.
அமீரகத்தின் 500 திர்ஹாம் பணத்தாளின் இலங்கை பணமதிப்பு ரூ. 44,708 ஆகும்.
ஒரே நாளில் ரூ.54,000 கோடி சொத்து அதிகரிப்பு., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டாப்-20க்குள் நுழைந்த அதானி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் சயீத்துடன், புதிய நோட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்கள், துபாய் Museum of The Future அருங்காட்சியகம், புர்ஜ் கலீஃபா மற்றும் எமிரேட்ஸ் டவர்ஸ் ஆகியவற்றின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய 500 திர்ஹாம் பணத்தாள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட நிலையான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
புதிய 500 திர்ஹாம் நோட்டு காகிதத்திற்கு பதிலாக பாலிமரில் (Polymer) தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளான பாலிமர் நாட்டில் சுற்றுச்சூழல் தாக்கத்தை கணிசமாக குறைக்கும் என நம்பப்படுகிறது.
இத புதிய ரூபாய் நோட்டில் 'KINEGRAM COLORS®' எனப்படும் பல வண்ண பாதுகாப்பு சிப் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளை எதிர்த்துப் போராட, இந்த தொழில்நுட்பங்கள் முன்பு AED 1000 ரூபாய் நோட்டின் புதிய பதிப்பில் பயன்படுத்தப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
United Arab Emirates New 500 Dirham Currency Note, UAE Central Bank issued a new 500-dirham polymer banknote