ரூ. 40,000 வரை தள்ளுபடியில் கிடைக்கும் Ola Scooter! சிறப்பு சலுகை அறிவிப்பு
ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மொடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகளை அறிவித்திருப்பது குறித்து பார்க்கலாம்.
ரூ. 40,000 வரை தள்ளுபடி
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் (Ola Electric Company) முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனமானது சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் மொடல்கள் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் தான், ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மொடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஓலா S1 X மொடலை ரூ. 74 ஆயிரத்து 999 என்ற Ex-showroom ஆரம்ப விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
முக்கியமாக, பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
அதன்படி, பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு நல்ல சலுகையை வழங்குகிறது.
மேலும், S1 Pro or S1 Air மொடல்களை வாங்கும் போது 7 நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பலன்களும் வழங்கப்படுகிறது.
அதாவது Ola S1 X பிளஸ் மொடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது இந்த மாத இறுதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக Ola S1 மொடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீ வாரண்டி கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |