தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ.1,200 ஆக உயர்வு! முழு விவரம் உள்ளே
இந்திய மாநிலம் தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு, ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபப்டுவதாக தகவல்களும் வெளியாகின.
முதியோர் ஓய்வூதியம் உயர்வு
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார்.
அவர் அப்போது கூறியதாவது, "தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும்,கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது" எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும்" என்றார்.
பயனாளிகள் எண்ணிக்கை குறைகிறது என்பது கணக்கில் கிடையாது. தகுதியான ஒருவர் கூட விடு மாட்டார்கள். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |