மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்ப படிவம்! அந்த வார்த்தையை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி இதில் யாரெல்லாம் பயனடைவார்கள், யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்காது என்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாதிரி விண்ணப் படிவத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2 பக்கங்கள் கொண்ட விண்ணப்ப படிவத்தில் 13 பிரிவுகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண், சொந்த வீடா வாடகை வீடா, வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், அரசு திட்டத்தில் நிதியுதவி பெறப்பட்டதா? குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த நிலம் உள்ளதா? கனரக வாகனங்கள் உள்ளதா? என்பது போன்று பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் திருமண நிலை என்ற பிரிவில், திருமணமானவர், திருமணமாகாதவர், விவாகரத்தானவர், கைவிடப்பட்டவர், விதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் விதவை என்ற சொல் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது, மறைந்த கலைஞர் கருணாநிதி இருந்த போது விதவை என்ற சொல்லுக்கு பதிலாக கைம்பெண் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது.
கலைஞர் படம் அச்சிடப்பட்டு வெளியான விண்ணப்ப படிவத்தில் விதவை என்ற சொல் இருக்கலாமா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |