தமிழகத்தில் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கும்?
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000:
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்நிலையில் எப்போதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற கேள்வி இருந்தது.
சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்
அனைத்து நியாயவிலை கடைக்கு அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி பயனாளர்களின் தகுதியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது
*5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இல்லை.
*ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க முடியும்
*சொந்தமாக கார் வைத்திருப்போர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
*பெண் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது
*எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
*மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |