'பழைய நண்பர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி' PSG vs ரியாத் XI போட்டிக்குப்பின் ரொனால்டோ நெகிழ்ச்சியுடன் ட்வீட்
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'பழைய நண்பர்கள்' ஒன்றாக காணப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நேர்மறையான உணர்வுகளை கொண்டுவந்துள்ளது.
ரொனால்டோ மகிழ்ச்சி
சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து போட்டிக்கு பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டார்.
Getty Images
அதில் "மீண்டும் ஆடுகளத்திலும், ஸ்கோர் ஷீட்டிலும் இடம்பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!! சில பழைய நண்பர்களைப் பார்ப்பதில் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் ரியாத் XI அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான கால்பந்து போட்டி வியாழக்கிழமை ரியாத்தில் நடந்தது.
So happy to be back on the pitch, and on the score sheet!! And nice to see some old friends!?? pic.twitter.com/qZqKGHsrVD
— Cristiano Ronaldo (@Cristiano) January 19, 2023
— Out Of Context Football (@nocontextfooty) January 19, 2023
இப்போட்டியில் விளையாடியதன் மூலம், சமீபத்தில் சவூதி அரேபியாவின் Al-Nassr கிளப்புடன் இணைந்த ரொனால்டோ தனது முதல் கோல்களை அடித்தார். இப்போட்டியில் பெனால்டியில் ஒரு கோலும், நேரடியாக ஒரு கோலும் அடித்தார் ரொனால்டோ.
இப்போட்டியில், லியோனல் மெஸ்ஸியின் PSG அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில்லர் வெற்றிபெற்றது. மெஸ்ஸி, எம்பாப்பே, ராமோஸ், மார்கினோஸ் மற்றும் ஹ்யூகோ எகிடிகே தலா ஒரு கோல் அடித்தனர்.
போட்டிக்குப்பின், எதிரணி வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே மற்றும் நெய்மரை ரொனால்டோ தேடிவந்து கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
الأسطورة ميسي عبر IG: pic.twitter.com/1F5dFcdW0w
— MESSI CHANNEL ? (@MessiVid10) January 19, 2023