ஓடும் விமானத்தில் பதற்றம்! மாஸ்க் அணியாத முதியவரை கன்னத்தில் அறைந்த இளம்பெண்.. வைரல் வீடியோ
விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்டு கொண்டிருந்த முதியவரை, இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் Atlanta பகுதியில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால் அவரை தாக்கியுள்ளார்.
அந்த முதியவர் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து இருந்த நிலையில் சாப்பிடுவதற்காக கழட்டியுள்ளார். அப்போது தான் அப்பெண் அவரை தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த பெண்ணின் தாக்குதலையடுத்து விமானம் தரையிறங்கியதும் அப்பெண்ணை பொலிஸ் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.