இந்திய மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் 257 பேர்
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. எனினும் இது லேசான அளவிலேயே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், 257 பேர் நாடு முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் ஒயிட்பீல்டு பகுதியைச் சேர்ந்த 85 முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டன. மேலும் சுவாச கோளாறு பிரச்சனையும் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |