வருடத்திற்கு ரூ.1.8 கோடி சம்பாதித்தாலும் துப்புரவுப் பணி செய்யும் 56 வயது நபர்.., அவர் கூறும் காரணம்
வருடத்திற்கு ரூ.1.8 கோடி சம்பாதித்தாலும் 56 வயது நபர் ஒருவர் துப்புரவுப் பணியை செய்கிறார்.
என்ன காரணம்?
டோக்கியோவில், 56 வயதான கொய்ச்சி மட்சுபராவின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 30 மில்லியன் யென் (சுமார் ரூ. 1.8 கோடி) சம்பாதித்தாலும், மட்சுபரா பகுதிநேரமாக துப்புரவுப் பணியாளராக வேலை செய்யத் தேர்வு செய்கிறார்.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தினமும் நான்கு மணி நேரம் வேலை செய்து, பொது இடங்களை சுத்தம் செய்து, குடியிருப்பு கட்டிடத்தில் சிறிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார் மட்சுபரா.
அவரது துப்புரவு மாத சம்பளமான 100,000 யென் (ரூ. 56,000) டோக்கியோவின் சராசரி மாத சம்பளத்தை ஒப்பிடும்போது மிகக் குறைவு.
மட்சுபராவுக்கு டோக்கியோ மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவருக்கு ஏழு வாடகை அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அவரது ரியல் எஸ்டேட் தவிர, பங்குகள் மற்றும் நிதிகளில் செய்யும் முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் யென் வருமானத்தை ஈட்டித் தருகின்றன.
ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வளர்ந்த மட்சுபரா, சிறு வயதிலிருந்தே சிக்கனத்தின் மதிப்பைக் கற்றுக்கொண்டார்.
மேல்நிலைப் பள்ளியை முடித்த பிறகு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண சம்பளத்தில் வேலை செய்தார் மட்சுபரா.
சந்தை சரிவின் போது தனது முதல் ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கு போதுமான அளவு சேமித்தார்.
தனது சொத்துக்களை கவனமாக நிர்வகிப்பதன் மூலமும், காலியிடங்களைத் தவிர்ப்பதன் மூலமும், அடமானங்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலமும், அவர் படிப்படியாக தனது ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை வளர்த்தார்.
செல்வம் மிக்கவராக இருந்தபோதிலும், மட்சுபரா குறைந்தபட்ச வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவர் ஒரு மலிவான அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, உணவை சமைத்து, பத்து வருடங்களுக்கும் மேலாக புதிய ஆடைகளை வாங்காமல் இருக்கிறார்.
அவர் ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து, வாகனம் ஓட்டுவதை விட சைக்கிள் ஓட்டுவதை விரும்புகிறார். அவரது ஸ்மார்ட்போன் கூட அடிப்படையானது.
தனது துப்புரவுப் பணி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கூர்மையாக வைத்திருப்பதாக மட்சுபரா நம்புகிறார்.
தினமும் காலையில், நான் எழுந்திருக்கிறேன், சுத்தம் செய்கிறேன், எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிறேன். இது மிகவும் நன்றாக இருக்கிறது என்கிறார் மட்சுபரா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |