முதியவர் தவறவிட்ட பெருந்தொகை.., நேர்மையுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்த இளைஞர்
முதியவர் ஒருவர் தவறவிட்ட பெரும் தொகையையும், ஆவணங்களையும் இளைஞர் ஒருவர் நேர்மையுடன் எடுத்து கொடுத்துள்ளார்.
முதியவரின் பணம் ஒப்படைப்பு
தமிழக மாவட்டமான கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). இவர் பத்திர எழுத்தாளர் ஆவார். இவர், ரூ.50000 பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக சென்ற போது பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த வழியாக சென்ற இளைஞர் லியாகத் உசேன் அன்சாரி என்பவர் அதனை எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பின்பு, முதியவர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்ட பொலிஸார் நடந்தவற்றை கூறினர். இதையடுத்து முதியவரின் ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட பணத்தை அரைமணி நேரத்தில் மீட்டு கொடுத்த பொலிஸாருக்கும், அதனை எடுத்து வந்து கொடுத்த இளைஞருக்கு முதியவர் நன்றி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |