உயிருள்ள ஆக்டோபஸை சாப்பிட்ட 82 வயது முதியவருக்கு நேர்ந்த கதி
82 வயது முதியவர் உயிருள்ள ஆக்டோபஸ் உணவை சாப்பிட்டு உயிரிழந்தார்.
தென் கொரியாவில் 82 வயது முதியவர் ஒருவர், உயிருள்ள ஆக்டோபஸால் செய்யப்பட்ட சான் நக்ஜி என்ற உணவைத் சாப்பிட்டதால் மாரடைப்பால் உயிரிழந்தார். உணவு உண்ணும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திங்களன்று தென் கொரியாவின் தென்மேற்கு நகரமான குவான்ஜுவில் நடந்தது. 82 வயது முதியவரின் தொண்டையில் சான் நக்ஜி துண்டு சிக்கியதாக தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் சென்ற மருத்துவர்கள், அந்த நபர் மாரடைப்பால் அவதிப்படுவதைக் கண்டனர். அவர்கள் முதியவர்களுக்கு அவசரமாக CPR செய்தனர், ஆனால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. பின்னர், உள்ளூர் மருத்துவமனையில் அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சான் நக்ஜி (san-nakji) 2003-ஆம் ஆண்டு வெளிவந்த த்ரில்லர் திரைப்படமான ஓல்ட் பாய் திரைப்படத்தில் ஒரு காட்சி மூலம் வைரலானது.
தென் கொரியாவிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்த வைரலான உணவை முயற்சி செய்கிறார்கள் என கூறப்படுகிறது.
இந்த உணவை சாப்பிட முயன்று பலர் இறந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், உணவு பிரியர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
2007 மற்றும் 2012ல் மூன்று பேரும், 2013ல் இருவர் மற்றும் 2019ல் ஒருவர் சான் நக்ஜியை உட்கொண்டதால் இறந்துள்ளனர். சான் நக்ஜி உலகின் மிகவும் ஆபத்தான உணவுகளில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Live Octopus Dish, san-nakji, South Korea