225 பந்துகளில் 253 ஓட்டங்கள் விளாசிய 25 வயது வீரர்
Oliver davies 253 runs vs tasmania: ஷெஃபீல்டு ஷீல்டு டெஸ்ட் போட்டியில் நியூ சௌத் வேல்ஸ் வீரர் ஓலிவர் டேவிஸ் இரட்டை சதம் விளாசினார்.
தாஸ்மானியா அணிக்கு எதிரான ஷெஃபீல்டு ஷீல்டு டெஸ்டில், நியூ சௌத் வேல்ஸ் வீரர் ஓலிவர் டேவிஸ் 253 ஓட்டங்கள் குவித்தார்.
மெக்டெர்மோட் 77
நியூ சௌத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியா அணிகளுக்கு இடையிலான ஷெஃபீல்டு ஷீல்டு டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.

தாஸ்மானியா அணி முதல் இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பென் மெக்டெர்மோட் 77 ஓட்டங்களும், கலெப் ஜூவேல் 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேக் ஸ்கோட் 5 விக்கெட்டுகளும், பிரைஸ் ஜேக்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஓலிவர் டேவிஸ் இரட்டைசதம்
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூ சௌத் வேல்ஸ் அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 500 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
25 வயதான தொடக்க வீரர் ஓலிவர் டேவிஸ் (Oliver Davies) 225 பந்துகளில் 253 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 38 பவுண்டரிகள் அடங்கும்.
ஜேக் எட்வர்ட்ஸ் 115 ஓட்டங்களும், குர்டிஸ் பேட்டர்சன் 54 ஓட்டங்களும் எடுத்தனர். மார்கஸ் பீன் 5 விக்கெட்டுகளும், கேப் பெல் மற்றும் வில் ப்ரெஸ்ட்விட்ஜ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
