9, 10வது இடங்களில் களமிறங்கி சதம் விளாசிய இருவர்
கவுண்டி டெஸ்டில் சசெக்ஸ் அணியில் ஓலி ராபின்சன் மற்றும் ஜேக் கார்ஸன் 9, 10வது விக்கெட்டில் சதம் விளாசினர்.
ஃபின் ஹட்ஸன்-ப்ரென்டிஸ் அதிரடி
சசெக்ஸ் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது வருகிறது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய சசெக்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
டாம் கிளார்க் 44 ஓட்டங்கள் எடுத்தபோதிலும், 92 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை சசெக்ஸ் இழந்தது.
அப்போது களமிறங்கிய ஃபின் ஹட்ஸன்-ப்ரென்டிஸ் அதிரடியாக 58 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
துவம்சம் செய்த ராபின்சன், கார்ஸன்
அதன் பின்னர் கைகோர்த்த ஜேக் கார்ஸன், ஓலி ராபின்சன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தது.

ஜேக் கார்ஸன் (Jack Carson) 149 பந்துகளில் 105 (14 பவுண்டரிகள்) குவித்து அவுட் ஆனார். கார்ஸன், ராபின்சன் கூட்டணி 173 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவரான ஓலி ராபின்சன் (Ollie Robinson) 152 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார்.
சசெக்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டுகளும், மேத்யூ ஃபிஷர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |