வெளிநாட்டில் பிரித்தானிய ஒலிம்பிக் வீரரிடம் கத்தி முனையில் கொள்ளை
பிரித்தானியாவின் முன்னாள் ஒலிம்பிக் படகு போட்டி வீரர் சர் பென் ஐன்ஸ்லியிடம் கத்தி முனையில் அவரது ரோலக்ஸ் கைக்கடிகாரம் திருடப்பட்டுள்ளது.
ரோலக்ஸ் கைக்கடிகாரம்
பார்சிலோனாவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. 47 வயதான ஐன்ஸ்லி சனிக்கிழமை இரவு உணவகத்தில் இருந்து வெளியேறும் போது குழு ஒன்றால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவரது ரோலக்ஸ் கைக்கடிகாரம் திருடப்பட்டுள்ளது. திருடுபோன கைக்கடிகாரத்திற்கு சுமார் 20,000 யூரோ மதிப்பு என்றும் சம்பவத்தை அடுத்து திங்களன்று பார்சிலோனாவில் புகார் அளித்துள்ளதாகவும் சர் பென் தெரிவித்துள்ளார்.
விதிவிலக்கல்ல
தற்போது அமெரிக்கா கிண்ணம் தொடர்பில் பிரித்தானிய அணி ஒன்றுடன் சர் பென் பார்சிலோனாவில் உள்ளார். பெரும்பாலான பெரும் நகரங்களில் இதுபோன்ற குற்றச்செயல்களால் பாதிக்கப்பட நேரிடும், அதில் தமது நிலையும் விதிவிலக்கல்ல என்றார்.
உள்ளூர் பொலிசார் இந்த விவகாரத்தில் விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர் பென் 1996 முதல் தொடர்ந்து 5 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் உட்பட பல பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |